₹250 Original price was: ₹250.₹220Current price is: ₹220.
‘வெளி’ நாடக இதழில் பிரசுரமான இந்த மொழிபெயர்ப்பு நாடகங்கள் தற்போது புத்தக வடிவில் வெளிவந்திருக்கிறது. தமிழில் நாடக நிகழ்வுகள் குறித்து இளம் நாடக செயல்பாட்டாளர்களிடம் ஆர்வங்கள் பெருகிவரும் சூழலில் இந்த நாடகப் பிரதிகள் புத்தகமாக வெளிவந்திருப்பது, அவற்றின் நிகழ்த்துதல் குறித்த சாத்தியங்களை அதிகரிக்க உதவும்.

வெவ்வேறு மொழிகளின் நாடகப் பிரதிகள் தமிழில் பிரசுரம் ஆவது புதிய நாடகப் பிரதிகள் தமிழில் உருக்கொள்வதற்கான சாத்தியங்களையும் அதிகரிக்க உதவ முடியும். வெவ்வேறு காலகட்டங்களின் சமூக அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் மனித உறவுநிலைகள் குறித்த சமகால நுண்ணுணர்வுடன் எழுதப்பட்டுள்ள இந்த நாடகங்கள் பல்வேறு கருத்தோட்டங்களின் பிரதிபலிப்புகளாக வடிவம் கொண்டுள்ளன.
இந்திய மொழிகளில் கவிதை, சிறுகதை போன்ற வடிவங்கில் சிறப்பான சாதனைகள் படைத்துள்ள தமிழ் மொழியில், அதற்கு இணையான நாடக ஆக்கங்கள் உருவாக வேண்டியதின் தேவைகள் குறித்த கவனத்தை இத்தொகுப்பு முன்னெடுக்கும்.
நடுக்கடலில் – நாடகத் தொகுப்பில் மொத்தம் பத்து அயல்மொழி நாடகப் பிரதிகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதில் உலக மொழிகள் முதற்கொண்டு நமது இந்திய மொழி நாடகங்கள் வரை அனைத்தும் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக தஸ்தாவ்ஸ்கி எழுதிய ‘மரண வீட்டின் குறிப்புகள்’ நாடகம் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடகப் பிரதியில் தேவையான கவிதைகளை ரமேஷ் பிரேதன் எழுதியுள்ளார்.